திருச்சி தேசியக் கல்லூரியில் நவராத்திரி உற்சவம் – 9 நாட்களும் ஒவ்வொரு கலாச்சார விழாக்களுடன் யூட்யூப்பில் நேரலை!

0 200
National

உலகத்தின் இயக்கத்திற்கு எல்லாம் சக்தி தான் ஆதாரம்.அந்த சக்தியை வழிபடுவதே நவராத்திரி திருவிழா. நவராத்திரி பண்டிகை புரட்டாசி அமாவாசை முடிந்து பிரதமை தொடங்கி தசமி வரை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மாசி மாதத்தில் சிவனுக்கு சிவராத்திரி கொண்டாடுவது போல புரட்டாசியில் ஒன்பது நாட்கள் சக்தியை வழிபட நவராத்திரி பண்டிகை கொண்டாடுகிறோம்.


இந்த நிலையில் திருச்சி தேசிய கல்லூரி, திருச்சி பாரதிய வித்யா பவன் மற்றும் பெங்களூர் இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் சார்பாக அக்டோபர் 7ம் தேதி முதல் 15ம் தேதி வரை 9 நாட்களும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கலாச்சார நிகழ்வுகளோடு நவராத்திரி உற்சவத்தை கொண்டாட உள்ளனர்.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

Click the image to Chat on Whatsapp

தேசிய கல்லூரி நவராத்திரி உற்சவத்தில் முதல்நாளான அக்டோபர் 7ம் தேதி ஸ்ரீரங்கம் நாட்டியாலயா கலைமாமணி ரேவதி முத்துசாமியின் குழு நடனமும், அக்டோபர் 8ம் தேதி ஆதர்ஷினி மற்றும் ஆகார்ஸ்னி ஆகியோரின் குரல் இசையும், சபின் பிரிட்ஜ் தனி நடனமும், அக்டோபர் 9ஆம் தேதி நித்தியசாந்தி அகெடமி குழுவினரின் குழு நடனமும், அக்டோபர் 10ம் தேதி பரதவாணி குழுவினரின் தெய்வீக இன்னிசையும், அக்டோபர் 11ம் தேதி சமிக்ஷா ஸ்ரீகாந்தன் மற்றும் ஆதித்யா ரங்கன் ஆகியோரின் குரல் இசையும், அக்டோபர் 12ம் தேதி கோவிலடி. மாதவ பிரசாத் இன்னிசை கச்சேரியும், அக்டோபர் 13ம் தேதி ஸ்ரீ முத்ர பரதநாட்டிய பள்ளி சார்பாக குழு நடனமும், அக்டோபர் 14ம் தேதி ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரியின் கலை இலக்கிய குழுவினர் சார்பாக சிறப்பு நிகழ்வு, அக்டோபர் 15ம் தேதி திருச்சி என்.ஐ.டி டான்ஸ் குழுவினரின் சிறப்பு நிகழ்வும் நடைபெற உள்ளது.


தேசிய கல்லூரி, திருச்சி பாரதிய வித்யா பவன் மற்றும் பெங்களூர் இன்ஃபோசிஸ் பவுண்டேஷன் சார்பாக நடைபெறும் இந்த நவராத்திரி உற்சவம் அனைத்தும் தினந்தோறும் மாலை 6 மணிக்கு தேசிய கல்லூரியில் தொடங்கவுள்ளது. மேலும் கல்லூரியின் யூடியூப் பக்கத்திலும் தினந்தோறும் நேரலை செய்யப்படுகிறது.

Dear Members and Friends, You can view the concerts at the ‘Navarathri Utsav’ everyday through the web link provided here.
http://www.youtube.com/channel/UCjHM8iSxEsjRP1fTDjabicg

Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!