தமிழ்நாட்டில் என்.டி.ஏ. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் : டி.டி.வி. தினகரன் பேட்டி

0 153
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23  திருச்சியில் அ.ம.மு.க பொதுச்செயலாளர் டி.டி.வி தினகரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று கூட்டு மந்திரி சபை தான் அமைக்கும். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அமைச்சரவையில் பங்கு வழங்கப்படும்.

தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அமித்ஷாவிடம் தான் கேட்க வேண்டும்.

அதிமுகவின் விசுவாசியாக இருந்த அன்வர் ராஜா திமுகவிற்கு சென்றது எனக்கு வருத்தம் அளிக்கிறது.

எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்ளும் சுற்றுப்பயணத்தில் அ.ம.மு.க பெயரை குறிப்பிடாதது குறித்த கேள்விக்கு உங்கள் சந்தேகங்களுக்கு நான் பதில் அளிக்க முடியாது. யாரிடம் இது குறித்து கேட்க வேண்டுமோ அவர்களிடம் தான் கேட்க வேண்டும்.

தமிழகம் வரும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்கவில்லை என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.