பராமரிப்பின்றி சருகுகளான ஆக்சிஜன் பூங்கா

0 219
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 23 திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை பகுதியில் 3 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஆக்சிஜன் பூங்கா முறையான பராமரிப்பின்மையால் பலனின்றி பாழாகியுள்ளது.
திருச்சியின் அடையாளமாக விளங்கும் பொன்மலை ரயில்வே பணிமனை பகுதியானது, அதிகமரங்களுடன், பசுமைப் பரப்பை உள்ளடக்கியதாக இருப்பதால் இந்தப் பகுதி தனித்த அடையாளமாக விளங்குகிறது.

இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில், கடந்த 2022- ஆம் ஆண்டு மே மாதம், பணிமனையின் அப்போதைய தலைமைப் பொறியாளர் ஏற்பாட்டின் பேரில், ரயில்வே திருமண மஹால், ரயில்வே பள்ளி ஆகியவற்றுக்கு அருகில் சுமார் 10 ஆயிரம் சதுர அடி பரப்பில் 1,050 பீமா மூங்கில்கள் நடப்பட்டு, ஆக்சிஜன் பூங்கா உருவாக்கப்பட்டது.

பீமா மூங்கிலின் சிறப்புகள்: பீமா மூங்கில்கள் என்பது, சிறப்பு திசு வளர்ப்பு முறையில் உருவாக்கப்பட்ட வேகமாக வளரும் மூங்கில் மரமாகும். இவை அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சி, ஆக்சிஜனை வெளியிடுவதன் மூலம் வளிமண்டலத்தை சுத்:தப்ப டுத்த உதவுகிறது. இந்த வகை மூங்கில்கள் 30 மாதங்களுக்குள் 35 அடி உயரம் வரை வளரும். முழுமையாக வளர்ந்த மரம் ஓராண்டுக்கு 320 கிலோ ஆக்சிஜனை வழங்கும். இந்த அளவானது ஓராண்டுக்கு ஒருமனிதனுக்குதேவைப்படும் ஆக்சிஜன் அளவைவிட அதிகமாகும். முழுமையாக வளர்ந்த ஒரு மரத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 100 கிலோ மூங்கில் கிடைக்கும். இது 4,500 கிலோ நிலக்கரிக்கு சமமான மிக அதிக எரிதிறன் மதிப் பைக் கொண்டது. இந்த வகை மூங் கில்களை மாற்று உயிரி எரிபொரு ளாகவும் பயன்படுத்தலாம். முள் கள் இல்லாததால், அறுவடை செய்வது எளிது. பீமா மூங்கில்களில் கைவினைப் பொருள்கள் மட்டுமல்லாது, சுற்றுச்சூழலுக்கு உகந்த பல்வேறு வகையான மூங் கில் உபபொருள்களை தயாரிக்க உதவுகிறது. பீமா மூங்கில் வலுவானது மற்றும் நீடித்து உழைக்கக் கூடியது, எனவே, இது கட்டுமானப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.

எதிர்பார்ப்பு பொய்த்தது: இத்தகைய சிறப்பு மிக்க பீமா மூங்கில்கள் நடப்பட்டு, பொன்மலையில் 2022-இல் திறக்கப்பட்ட பூங்கா, 4 ஆண்டுகளில் முழுமையான ஆக்சிஜன் பூங்காவாக உருவாகி, ஆண்டுக்கு ஆயிரம் டன் கரியமில வாயுவை உறிஞ்சும் என எதிர்பார்க் கப்ட்டது. ஆனால், முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் எதிர்பார்ப்புகள் அனைத்தும் பொய்த்துப் போனது. மூங்கில்கள் 3 ஆண்டுகளில் 35 அடி உயரம் வளர்ந்து நிற்கும் என்பதற்கு எதிர்மாறாக, காய்ந்து பசுமையின்றி சருகுகளாக காட்சியளிக்கிறது.

ரயில்வே பணிமனை குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ரயில்வே தொழிலாளர்களின் குடும்பங்கள் சுத்தமான ஆக்சிஜனை சுவாசிக்கவும், பொன்மலை பகுதிக்கு வந்து செல்லும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஆக்சிஜனை வாரி வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட பொன்மலை ஆக்சிஜன் பூங்கா, அதன் நோக்கத்தை பூர்த்தி செய்யாதது சுற்றுச்சூழல் ஆர்வலர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.