ராமஜெயம் கொலை வழக்கு குறித்து நேரு குடும்பத்தினரிடம் விசாரிக்க வேண்டும் : வழக்குரைஞர் பேட்டி

0 462
Stalin trichy visit

திருச்சி நவ/ 1ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக அமைச்சர் K.N. நேரு குடும்பத்தினரிடம் விசாரணை நடத்த வேண்டும்.. ரவுடி மோகன் ராம் வழக்கறிஞர் அலெக்ஸ் பேட்டி

நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக தமிழகத்தில் பிரபல ரவுடிகள் 12 பேர் திருச்சி 6-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

உண்மை கண்டறியும் சோதனை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ள நிலையில் திருச்சி நீதிமன்றத்தில் இருந்து இவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டது.  அதில்மோகன்ராம், தினேஷ் , நரைமுடி கணேசன், சத்யராஜ், குணசேகரன் உள்ளிட்ட 12 பேர் நீதிபதி முன்னிலையில் ஆஜராகினர். இந்த வழக்கை வரும் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

இதுகுறித்து பேட்டியளித்த மோகன் ராம் வழக்கறிஞர் அலெக்ஸ் உண்மை கண்டறியும் சோதனைக்கு நீதிமன்ற அனுமதியை எஸ்.பி தான் கோர முடியும் என உயர்நீதிமன்றம் தெளிவுப்படுத்தி உள்ள நிலையில் அதற்கு மாறாக ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வு குழுவின் டி.எஸ்.பி தான் அனுமதி வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். இது உயர்நீதிமன்ற வழிக்காட்டலுக்கு எதிரானது. எனவே இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவின் எஸ்.பி மீண்டும் மனு தாக்கல் செய்ய வேண்டும் வரும் 7 ஆம் தேதி மீண்டும் அனைவரும் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக ஏன் அவர் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொள்ளவில்லை என கேள்வி எழுப்பிய வழக்கறிஞர், ராமஜெயம் மது அருந்தும் பழக்கமில்லை என கூறியுள்ளனர். ஆனால் அவருக்கு மது அருந்தும் பழக்கமுள்ளது என சி.பி.ஐ விசாரணை அறிக்கையில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது. எனவே முதலில் அவர் குடும்பத்தினரிடம் மீண்டும் விசாரணை நடத்த வேண்டும்.

அரசியல் காரணங்களுக்காகவே 12 பேரை மட்டும் அழைத்துள்ளனர் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.