திருச்சியில் இரண்டு இடங்களில் அஸ்வின்ஸ் புதிய கிளைகள் திறப்பு

0 15
Stalin trichy visit

திருச்சி, நவ.2  திருச்சி – நம்பர் 1 டோல்கேட் உட்பட 2 இடங்களில் அஸ்வின்ஸ் புதிய கிளைகள் பிரம்மாண்ட திறப்பு

பெரம்பலூரை தலைமையிடமாக கொண்ட பிரபல அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் & ஸ்நாக்ஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் 45 கிளைகளை கொண்டுள்ளது. நேற்று (நவ.1)  2 புதிய கிளைகள் திருச்சியில் பிரம்மாண்டமாக திறக்கப்பட்டது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் திருச்சி No.1 டோல்கேட் 2 இடங்களில் ஒரே நாளில் புதிய கிளைகள் திறக்கப்பட்டன.

No 1 டோல்கேட் கிளையை நிர்வாக இயக்குநர் Dr KRV கணேசன் திறந்து வைத்தார், சத்திரம் பேருந்து நிலையம் கிளையை செல்வகுமாரி கணேசன், நிஷா, சிபி ஆகியோர் திறந்து வைத்தனர்

புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கிளைகளில் அஸ்வின்ஸ் ஸ்பெஷல் பால்கோவா, நெய் மைசூர்பாக், குலாப் ஜாமூன், பர்பி, சந்திரகலா, நெய் பாதுஷா, தேங்காய்ப்பால் முறுக்கு, தட்டை, ரிப்பன் பக்கோடா, மிக்சர், சீடை, எள்ளு உருண்டை, பப்ஸ், கேக், பிஸ்கட் வகைகள், சூடான தேநீர், காபி மற்றும் சாட் வகைகள் கிடைக்கும்

மேலும் no 1 டோல்கேட் பகுதியில் உள்ள கிளையில் விசேஷ நிகழ்ச்சிகளுக்காக அஸ்வின்ஸ் PARTY HALL வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.