துறையூரில் புதிய அரசுக் கல்லூரி திறப்பு

0 334
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 20 திருச்சி மாவட்டம், துறையூரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

கல்லூரியில் நடைபெற்ற விழாவில் நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு கல்லூரி வளாகத்தை பார்வையிட்டு சேர்க்கை அனுமதியை மாணவர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், முசிறி சட்டமன்ற உறுப்பினர்கள் தியாகராஜன் (முசிறி), செ.ஸ்டாலின்குமார் (துறையூர்), சீ.கதிவரன்(மண்ணச்சநல்லூர்), கல்லூரி கல்வி இணை இயக்குநர் பொன்முத்துராமலிங்கம், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கங்காதாரணி, அரசுத்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.