புதிய ஊராட்சி மன்றஅலுவலக கட்டிடம்: அமைச்சர் கே.என்.நேரு திறப்பு
திருச்சி, மே 29 திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஊராட்சி ஒன்றியம், அம்மாபேட்டை ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். உடன் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தேவநாதன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) கங்காதாரணி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.