உப்பிலியபுரத்தில் புதிய சித்த மருத்துவ பிரிவு : அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

0 212
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலிய புரத்தில் ரூபாய் 23.30 லட்சம் மதிப்பில் புதிய சித்த மருத்துவ பிரிவை நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் அப்பொழுது சித்த மருத்துவம் என்பது மிக மிக முக்கியமானது அலோபதியை விட சற்று தாமதமாக ஆனாலும் நிரந்தரமான தீர்வு சித்த மருத்துவத்தில் கிடைக்கிறது எனவும் பேராசிரியர் தனது வாழ்நாள் முழுவதும் சித்த மருத்துவத்தை எடுத்துக் கொண்டார் எனவும் பேசினார் தொடர்ந்து பேசிய மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் திருச்சி மாவட்டத்தில் தொகுதிக்கு 10 கோரிக்கைகள் என்ற முதல்வரின் உத்தரவுப்படி நகர்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்கள் தனது 10 கோரிக்கைகளில் சித்த மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அதுவும் ஒரு கோரிக்கையாக வைத்துள்ளார் எனவும் 35 சித்த மருத்துவ பிரிவுக்கு கட்டிட வசதிகள் கேட்டிருந்தார்கள் அதற்கான நடவடிக்கைகளை விரைந்து எடுக்கப்படும் எனவும் பேசினார்.

Leave A Reply

Your email address will not be published.