முசிறியில் ஓரணியில் தமிழ்நாடு புதிய உறுப்பினர் சேர்க்கை : அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

0 217
Stalin trichy visit

திருச்சி, ஜூலை 5 திருச்சி மாவட்டம், முசிறியில் வீடு, வீடாக சென்று அமைச்சர் கே.என்.நேரு திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் ஆகியோர் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் மக்களுடன் ஸ்டாலின் செயலி மூலம் வீட்டில் அமர்ந்து உறுப்பினர்களை சேர்த்தார். அப்போது உறுப்பினர்கள் சேர்க்கைக்கான அடையாளத்தை வீட்டின் முகப்பில் ஓரணியில் தமிழ்நாடு முதலமைச்சர் படம் உள்ள ஸ்டிக்கரை ஓட்டினர். தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவகுமார் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர் கே.என்.நேருவிடம் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.