லால்குடியில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி மாவட்டம் லால்குடி ரவுண்டானாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி
புதிய தமிழகம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லால்குடி ரவுண்டானாவில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த கோரி
புதிய தமிழகம் கட்சியின் சார்பில் லால்குடி ஒன்றிய செயலாளர் அரசகுமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி புதிய தமிழகம் கட்சியினர் மதுபான பாட்டில்களை உடைத்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். இதையடுத்து ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகளை போலீசார் தடுத்து நிறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் தினகரன் லால்குடி ஒன்றிய செயலாளர் அரசகுமார், லால்குடி நகர செயலாளர் சிவகுமார், மாவட்ட மாணவரணி செயலாளர் விஜய பிரபு,லால்குடி நகர செயலாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி செயலாளர் நகர் சிலம்பரசன் மற்றும் புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதனைதொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை லால்குடி போலீசார் கைது செய்தனர். கைது செய்த புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகளை அங்குள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்களை விடுவித்தனர்.