முசிறி திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் புத்தாண்டு திருப்பலி
திருச்சி, ஜன.1 திருச்சி மாவட்டம், முசிறி கைகாட்டி பகுதியில் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு திருப்பலி நடைபெற்றது, திருப்பலியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு இறை வழிபாடு செய்து புத்தாண்டை கொண்டாடினர்,
இந்நிலையில் முசிறி திரு இருதய ஆண்டவர் ஆலயம் மற்றும் சுற்றியுள்ள கிறிஸ்தவ ஆலயங்களிலும் மற்றும் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இரவு நேரங்களில் சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்டறியும் விதமாகவும், வெடிபொருட்கள் ஏதும் வைத்துள்ளனரா? என கண்டறியும் விதமாக வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் காவேரி மோப்பநாய் உடன் முசிறி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்,
அப்பொழுது முசிறி டிஎஸ்பி சுரேஷ்குமார் வருகை தந்த பொழுது அவருக்கு மோப்பநாய் காவிரி மரியாதை செய்யும் விதமாக புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து வணங்கி மரியாதை செலுத்தியது, உடன் காவல்துறையினர் இருந்தனர், பொதுமக்கள் இதை கண்டு வியப்படைந்தனர்.