குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் ஊட்டச்சத்து தோட்டம் உருவாக்கும் நிகழ்ச்சி
மணப்பாறை அருகே கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு குழந்தைகள் பராமரிப்பு இல்லத்தில் ஊட்டச்சத்து தோட்டம் உருவாக்கப்பட்டது.
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள தொட்டியபட்டியில் சமூக பாதுகாப்புத் துறையின் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் விடிவெள்ளி முதியோர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு இல்லத்தில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஊட்டச்சத்து தோட்டம் உருவாக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் தக்காளி, மிளகாய், கத்தரி, பப்பாளி, சப்போட்டா, மாதுளை உள்ளிட்ட காய்கறி மற்றும் பழ மரங்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. கீரை விதைகளும் தூவப்பட்டன. முதியோர்கள் மற்றும் குழந்தைகள் ஆர்வமுடன் நடவுப்பணியில் ஈடுபட்டனர். இதில் சமூக பாதுகாப்பு அலுவலர்கள், சுகாதாரத்துறையினர் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு இல்ல நிர்வாகிகள் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர் ஆர்.கிருத்திகா, சுகாதார ஆய்வாளர் ஏ.ராமசாமி, விடிவெள்ளி நிர்வாக செயலாளர் என். கோபால், எஸ்.சரிதா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்