சாலையை கடக்க முயன்றவர் மீது லாரி மோதி விபத்து

0 312
Stalin trichy visit

பி கே அகரம் சாலை விபத்தில் ஒருவர் படுகாயம்

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பி கே அகரத்தில் உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர் சாலையை கடக்கும்  போது அவ்வழியே  வந்த லாரி மோதிய விபத்தில் படுகாயம் அடைந்தார்.

ஸ்ரீரங்கம் தாலுக்கா பெருகமணி, பாரதி நகரை சேர்ந்தவர் 50 வயதான குமார், இவர் திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பிகே அகரம் பேருந்து நிறுத்த பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியே பெரம்பலூர் மாவட்டம் வேலூர் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த  46 வயதான ஆனந்தகுமார் ஓட்டி வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்தார். விபத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து சிறுகனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.