எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்: அதிமுகவினர் மனு

0 209
Stalin trichy visit

திருச்சி, நவ.6 எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று அதிமுகவினர் மனு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி நவ.4 முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி (எஸ்.ஐ.ஆர்) நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளுக்கு வாக்குச்சாவடி முகவர்களை பயன்படுத்தினால் முறைகேடு நடைபெற வாய்ப்புள்ளது. எனவே வாக்குச்சாவடி அலுவலர்களை மட்டுமே பயன்படுத்தி எஸ் ஐ ஆர் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாவட்ட அதிமுக செயலளார்கள் பரஞ்சோதி, சீனிவாசன், குமார் ஆகியோர் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணனிடம் மனு அளித்தனர்.

Leave A Reply

Your email address will not be published.