சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை திறப்பு

0 285
Stalin trichy visit

வாளாடியில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே வாளாடி பேருந்து நிறுத்தம் அருகில் சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை திறப்பு விழா நடைபெற்றது.

திருச்சி புறநகர் மாவட்டம் ஆட்டோ தொழிலாளர் சங்கம் -சிஐடியு புதிய கிளை லால்குடி அருகே வாளாடி பேருந்து நிறுத்தம் அருகில் இன்று காலை 10 மணி அளவில் செங்கொடி ஏற்றி திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

தோழர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் சிஐடியு மாவட்ட தலைவர் தோழர் சம்பத்,சிஐடியு மாவட்ட செயலாளர் சிவராஜ், ஆட்டோ தொழிலாளர் சங்கம் -சிஐடியு மாவட்ட செயலாளர் சந்திரசேகர், ஆட்டோ சங்க மாவட்ட குழு கார்த்திக் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலு, வாளாடி ஊராட்சி மன்ற கவுன்சில்ர், ஆட்டோ ஸ்டாண்டு நிர்வாகிகள் , உறுப்பினர்கள், லோடு ஆட்டோ ஸ்டாண்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெரும் திரளாக கலந்து கொண்டு திறப்பு விழா நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் 22 தோழர்கள் சங்கத்தில் புதிய உறுப்பினராக தங்களை இணைந்தது கொண்டனர்கள்.

நிகழ்ச்சியில் 22 உறுப்பினர்கள் சிஐடியூ சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டார்கள்

Leave A Reply

Your email address will not be published.