ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறப்பு : அமைச்சர் அறிவிப்பு

திருச்சி, மே 26 தமிழ்நாட்டில் கோடை வெப்பம் அதிகமாக இருப்பதால் பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்ல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சரிடம் பேசி இன்று அறிவிக்கப்படும் என்று கூறினார். இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவர்களின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு ஜூன் மாதம் 7ஆம் தேதி முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.