தமிழ்நாட்டில் பள்ளிகளில் திறப்பு எப்போது?

0 381
Stalin trichy visit

திருச்சி வருகிற கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். அப்போது, அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும். பள்ளித்தூய்மையை உறுதிசெய்ய வேண்டும். விலையில்லா பொருட்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் கட்டாய மொழிப்பாடம் என்ற விதியை தனியார் பள்ளிகள் பின்பற்றுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு ஆலோசனைகளை முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அமைச்சர் வழங்கினார். மேலும் வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பள்ளிகள் திறப்பு குறித்து அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

இது குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று நேற்று கூறும்போது, வெயிலின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்து நாளை (இன்று) முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று பள்ளிகள் திறக்கப்படும் தேதி நாளை (இன்று ) அறிவிக்கப்படும் என்றார்.

 

Leave A Reply

Your email address will not be published.