ஓ.பி.எஸ், பிரேமலதா தி.மு.க. கூட்டணியில் இணைவார்களா என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்: அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

0 230
Stalin trichy visit

திருச்சி ஆக.1  ஓ.பி.எஸ், பிரேமலதா தி.மு.க. கூட்டணியில் இணைவார்களா என்பதை முதலமைச்சர் முடிவு செய்வார்  – திருச்சியில் அமைச்சர் மனோ தங்கராஜ் பேட்டி

தமிழக பால்வள துறை அமைச்சர் மனோ தங்கராஜ் இன்று திருச்சி சுப்பிரமணியபுரத்தில் உள்ள ஆவின் பால் உற்பத்தி அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது பாலின் தரம், பாலின் தன்மை குறித்து அதிகாரிடம் கேட்டறிந்தார். மேலும் ஆவின் பால் பொருட்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் ஐஸ் மற்றும் இதர பால் பொருட்கள் தயாரிக்கும் கட்டமைப்பு பணிகளை ஆய்வு மேற்கண்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இங்கு இரண்டு திட்டங்கள் நடைபெற்று வருகிறது தயிர், லெசி போன்ற பால் பொருட்கள் தயாரிப்பதற்கான பிளான்ட் பணிகள் நடைபெற்று வருகிறது. டெல்டா மற்றும் திருச்சி சிட்டி பகுதிகளுக்கு தயிர், லெசி மற்றும் பால் பொருட்கள் இங்கேயே தயாரிக்கப்பட்ட உள்ளது. இங்கு இருக்கும் இயந்திரங்கள் வெகு நாட்கள் நாட்கள் ஆகிவிட்டதால் மாற்றுவதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வாரிசுகளுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் தற்போது பணிகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

2021இல் அதிமுக ஆட்சியில் பணிகளில் சேர்க்கப்பட்டவர்கள் நிரந்தரம் செய்யவில்லை என கூறப்படுகிறது என்ற கேள்விக்கு பழைய கதைககளை குறித்து எங்களிடம் கேட்க வேண்டாம். தற்காலிக பணியளர்கள் யாரும் தற்போது போடவில்லை.
டி.என்.பி.எஸ்.சி. மூலமாக தேவைப்படும் ஆட்களை பணிக்கு எடுக்கிறோம். அதில் எந்த ஒளிவு மறைவற்ற தன்மையில் செயலாற்றி வருகிறது. இரண்டாவது ஒப்பந்த அடிப்படையில் ஆட்கள் நியமிக்கப்படுகிறது. பழைய காரியங்களில் ஏற்பட்ட தவறுகளுக்கு நாம் பதில் சொல்ல முடியாது. சில நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றை உள்ளது அது நமது அரசுக்கு பொருந்தாது.

சென்னையில் பால் விற்பனை அதிகப்படுத்தப்பட்டுள்ளது 24 கோடிக்கு மேலாக விற்பனை தற்போது 33கோடி அளவுக்கு விற்பனை உயர்ந்துள்ளது.  நான் பொறுப்பேற்ற நேரத்தில் பால் கொள்முதலில் கவனம் செலுத்தினோம். அதேபோல் விற்பனையிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

சென்னை மெட்ரோ பாலிடெனில் மட்டும் பொறுத்த வரை கடந்த மூன்று மாதங்களில் 6 கோடி அளவுக்கு பால் விற்பனை அதிகரித்துள்ளது.

திருச்சியில் தற்போது 1.5கோடி அளவிலான விற்பனை நடைபெற்றுக் கொண்டிருப்பது விற்பனை அதிகரிக்க ஆலோசனை கொடுத்துள்ளேன். பணியாட்கள் அதற்காக வழங்கப்பட உள்ளது.

ஓபிஎஸ், பிரேமலதா முதல்வரை சந்தித்துள்ளனர் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு? தலைவரே சொல்லிவிட்டார் கூட்டணியில் புதிய கட்சிகள் சேர்க்கப்படலாம் என மற்றவை கட்சி தலைவர் தான் கேட்க வேண்டும்

திருச்சியில் தயிர், ஐஸ் மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியை தொடர்பான கட்டமைப்பு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் அதனை செயல்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.  இன்று விவசாய பெருங்குடி மக்களை சந்தித்து அவர்களது பாலை இயந்திரம் மூலம் தரம் சரி பார்த்து பணம் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தேன்.

ஒரு லிட்டர் பாலுக்கு ₹40.33 பைசா கொடுத்துள்ளோம். உடனடியாக அது ரசீதும் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது. அதற்கான குறுஞ்செய்தியும் அவர்களது செல்போனுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த விலையுடன் மூன்று ரூபாய் மானியமும். பாலில் தரத்திற்கு ஏற்ப ரூபாய் ஒன்றும் கூடுதலாக கொடுக்கப்படுகிறது. இதனை விவசாயிகள் வரவேற்கின்றனர். விவசாய பெருமக்கள் பால் கொடுக்கும் பொழுது அதற்கான ரசீது வருகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

அமைச்சரின் ஆய்வின் போது துறை அதிகாரிகள், ஊழியர்கள் உடன் இருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.