சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார விழா
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்ச பிரகார விழா.வடக்காவிரியில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் கொண்டு வந்தனர்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பஞ்சப்பிரகார விழா.ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பட்டாச்சியார்கள் வடக்காவிரியில் இருந்து வெள்ளிக் குடங்களில் தீர்த்தம் மற்றும் யானை மேல் தங்க குடத்தில் தீர்த்தம் எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர்.
அம்மன் ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் ஐந்து பெரும் உற்சவங்களில் பஞ்சப்பிரகாரம் என்பது வசந்த உற்சவம் ஆகும். பஞ்ச பூதங்கள், ஐம்பெரும் தொழில், ஐம்பெரும் கலை, ஐம்பெரும் பீடம், ஐம்பெரும் உயிர் அவத்தைகள் இவற்றை விளக்கும் தத்துவமாக உள்ள இந்த பஞ்ச பிரகார உற்சவம். மாயாசூரனை சம்ஹரிக்க பராசக்தி மஹாமாரி வடிவம் எடுத்து இத்தலத்தில் அக்னி நட்சத்திரத்தில் உஷ்ண கிராந்தியை தணிப்பதற்காக
கடந்த 6 ந்தேதி தொடங்கி வருகின்ற 23ஆம் தேதி வரை பஞ்சப்பிரக விழா நடைபெறும். இதனையொட்டி கடந்த 6 ந்தேதி முதல் 14 ந்தேதி வரை ஒவ்வொரு இரவும் அம்மன் வெள்ளிக்
கேடயத்தில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.