முசிறி அரசு பள்ளியில் கலைப்பிரிவுக்கு ஆங்கில வழிகல்வி கோரி மனு
திருச்சி, மே 15 ஏ.வி.பி.வி அமைப்பின் மாநில செயற்குழு உறுப்பினர் சந்தோஷ்குமார், திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் திருச்சி மாவட்டம், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கிராமபுற மாணவர்கள் அதிகமாக பயின்று வருகின்றனர். தற்போது அப்பள்ளியில் மேல்நிலை வகுப்பில் அறிவியல் பாட பிரிவிற்கு மட்டும் ஆங்கில வழி கல்வி உள்ளது. இந்த ஆண்டு கலைப்பாட பிரிவிற்கும் ஆங்கில வழி கல்வி கொண்டு வரவேண்டும். கடந்த 3 ஆண்டுகளாக கலைப் பாட பிரிவில் ஆங்கில வழி கல்வி இல்லாத காரணத்தால் பல்வேறு மாணவர்கள் தனியார் பள்ளிக்கு செல்லக் கூடிய சூழல் உருவானது. ஆகவே இந்தாண்டு கிராமப்புற மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கலைப்பாட பிரிவிற்கும் ஆங்கில வழி கல்வி கொண்டு வர வேண்டுமென அதில் தெரிவித்துள்ளார்.