பஞ்சகவ்யா மீன் அமிலம் கரைசல் தயாரித்தல் செயல் விளக்கம்

0 434
Stalin trichy visit

திருச்சி, செப். 2  திருச்சி மாவட்டம் லால்குடி அருகே மருதூர் கிராமத்தில் அட்மா திட்டத்தில் இயற்கை இடுபொருட்கள் பஞ்சகவ்யா மீன் அமிலம் கரைசல் தயாரித்தல் பற்றிய செயல் விளக்கம்

லால்குடி அருகே மருதூர் கிராமத்தில் முத்தையா தோட்டத்தில் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது இதில் பசுஞ்சாணம் 5 கிலோ நெய் அரை லிட்டர் கலந்து இரண்டு நாட்கள் வைத்திருந்து அதன் பின் கோமியம் 5லிட்டர், இரண்டு லிட்டர் புளித்த தயிர், பசும்பால் இரண்டு லிட்டர், நன்கு கனிந்த வாழைப்பழம் 12 எண்கள், பேரிச்சம்பழம்400 கிராம், நாட்டு சர்க்கரை ஒரு கிலோ ஆகியவற்றைக் கலந்து தினமும் காலை மாலை இருவேளை நன்கு குச்சி கொண்டு கலக்கி வைக்க வேண்டும் 20 முதல் 25 நாட்களில் பஞ்சகவியம் கரைசல் தயாராகிவிடும் என்று விவசாயிகளுக்கு செயல் விளக்கமாக செய்து காண்பிக்கப்பட்டது. இதேபோன்று மீன் கழிவுகள் வெல்லம் கலந்து மீன் அமிலம் கரைசல் தயாரித்தல் பற்றி அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் சபரி செல்வன், உதவி தொழில் நுட்ப மேலாளர் கார்த்திக் ஆகியோர் செயல்விளக்கம் செய்து காண்பித்தனர் இதில் மருதூர் கிராம உழவர் நண்பர் சிவபாலன், பெரியண்ணன் புலிகேசி மற்றும் பல முன்னோடி விவசாயிகள் கலந்து கொண்டு இயற்கை இடுபொருட்கள் தயாரித்தல் பற்றி அறிந்து கொண்டனர் மேலும் இந்த செயல் விளக்கம் அமைத்துக் கொடுத்த வேளாண்மைத் துறை மற்றும் அட்மா திட்டத்திற்கு திரு முத்தையா நன்றி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் இறுதி ஆண்டு இளங்கலை வேளாண்மை பயிலும் நான்காம் ஆண்டு மாணவர்கள் கு. சிவ அனவரதன், ம. தமிழ்முழக்கன், தி. கருப்பணன், மு ரூபன் மற்றும் ஐ.ஜெய்சன் ஐசக் வேளாண்மை பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு இயற்கை இடுபொருட்கள் அவசியம் பற்றி விரிவாக விளக்கி கூறினார்கள்

Leave A Reply

Your email address will not be published.