மாற்றுத்திறனாளிகள் சங்கத்திற்கு மிதியடி தயாரிக்கும் எந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது

0 233
Stalin trichy visit

திருச்சி மாவட்டம்,  காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் மாற்றுதிறனாளிகளுக்கு மிதியடி தயாரிப்பதற்கு சிறப்பு பயிற்சி மற்றும் திட்ட மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது.

காட்டுப்புத்தூர் தேர்வுநிலை பேரூராட்சியில் முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமையில் கடந்த 20.10.2022 அன்று மிதியடி தயாரிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டது. கால்மிதியடி தயாரிக்கும் இயந்திரத்தினை கொண்டு கால்மிதியடி தயாரிக்க இல்லதரசிகளுக்கு தூய்மை பணியாளர்களின் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இல்லதரசிகள் பயிற்சி பெற்று தினசரி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ள கால்மிதியடி இயந்திரம் மூலம் கால்மிதியடிகள் தயாரிக்கின்றனர். இல்லதரசிகளால் தயாரிக்கப்படும் கால்மிதியடிகள் ஒரு மிதியடி ரூ.40/- என விற்பனை செய்யப்படுகிறது.

இல்லதரசிகள் கால்மிதியடிகள் தயாரிப்பதற்கு ஊக்கத்தொகையாக ஒரு மிதியடிக்கு ரூ.20/- வீதம் வழங்கப்படுகிறது. அவ்வாறு தற்போது 75 மிதியடிகள் தயாரித்த இல்லதரசிக்கு ரூ.1500/- ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மேலும், மாற்றுதிறனாளிகளும் பயன்படும் நோக்கத்தில் மேஜர் டோனர் சீனிவாசன் மூலம் சங்கம்பட்டி மாற்றுதிறனாளிகள் சங்கத்திற்கு இரண்டு கால்மிதியடி இயந்திரங்கள் வழங்கப்பட்டது. மாற்றுதிறனாளிகள் கால்மிதியடி தயாரிக்கும் இயந்திரம் மூலம் கால்மிதியடிகள் தயார் செய்வதற்கும் மற்றும் அதனை விற்பனை செய்து அதன் மூலம் தங்களது வாழ்வாதாரத்தை உயர்த்தி கொள்ளவும் முதற்கட்டமாக சங்கம்பட்டி மாற்றுதிறனாளிகள் சங்க தலைவர் சரசு என்பவருக்கு செயல் அலுவலர் சாகுல் அமீது தலைமையில் காட்டுப்புத்தூர் பேரூராட்சி தூய்மை பணியாளர் மூலம் மிதியடி தயாரிக்கும் இயந்திரம் மூலம் மிதியடி தயார் செய்வதற்கான பயிற்சியும் மற்றும் மிதியடி தயார் செய்வதற்குரிய மூலதன பொருள் எவ்வாறு வாங்குவது மற்றும் தயார் செய்த மிதியடிகளுக்குரிய விலையினை நிர்ணயம் செய்து விற்பனை செய்வதன் மூலம் வருமான ஈட்டுவதற்கான திட்ட மேலாண்மை பயிற்சியும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேரூராட்சி மன்ற தலைவர் சங்கீதா சுரேஷ், துணைத்தலைவர் சுதா சிவசெல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளநிலை உதவியாளர்கள் பாரதியார், சித்ரா, இராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் (பொ) கண்ணன், கணினி இயக்குநர் மதுசூதனன் மற்றும் பணியாளர்கள் உடனிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.