எம்.ஐ.டி கல்வி நிறுவனங்களின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி
முசிறி எம் ஐ கல்வி நிறுவனங்களின் சார்பில் டெங்கு விழிப்புணர்வு குறித்து பேரணி நடைபெற்றது.
முசிறி கைகாட்டியில் இருந்து துவங்கிய பேரணிக்கு எம்ஐடி கல்வி குழுமங்களில் துணைத் தலைவர் பிரவீன் குமார் தலைமை வகித்தார்.முசிறி துணை காவல் கண்காணிப்பாளர் யாஸ்மின் முன்னிலை வகித்து கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். முசிறி கைகாட்டியிலிருந்து துறையூர் ரோடு பூங்கா வரை நடைபெற்ற பேரணியில் சுற்றுப்புறத்தை தூய்மையாக பராமரிப்போம்- டெங்கு காய்ச்சல் வராமல் தடுப்போம், உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியவாறும், துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மத்தியில் வழங்கியும் மாணவ மாணவிகள் சென்றனர். முன்னதாக
நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியன், பள்ளி முதல்வர் சவிதா, கல்வி ஆலோசகர்கௌரி ஆகியோர் பேரணியின் நோக்கம் குறித்து பேசினர்.
எம் ஐ டி போதி வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் சமூக ஆர்வலர்கள்| காவல்துறையினர், பேரணியில் கலந்துகொண்டனர்.