அனுமதி நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு அபராதம்
திருச்சி, செப். 2 மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தின் நுழைவாயிலில் அனுமதியின்றி நிறுத்தப்பட்ட இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் .
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி பொன்னம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலையத்தில் பேருந்துகள் உள்ளே செல்லும் பகுதியின் இரு புறங்களிலும் இருசக்கர வாகன ஓட்டிகள் தங்களது இருசக்கர வாகனங்களை வரிசையாக நிறுத்தி விட்டு சென்று விடுகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ளே செல்லக்கூடிய பேருந்துகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி பேருந்து ஓட்டுநர்கள் பேருந்து இயக்குவதில் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை அடுத்து மணப்பாறை போக்குவரத்து ஆய்வாளர் கணேசன் மற்றும் போக்குவரத்து காவலர்கள் நேற்று பேருந்து நிலையத்தின் உள்ளே செல்லக்கூடிய இரு புறங்களில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் அமரக்கூடிய நிழற்குடையில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். மேலும் இதுபோன்று இனி இருசக்கர வாகனங்களை இங்கு நிறுத்தக்கூடாது என்றும் நிறுத்தினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம் காவலர்கள் கூறினார்கள்.