முறையாக குடிநீர் வழங்காததைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

0 196
Stalin trichy visit

திருச்சி, ஏப்.8 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி ஒன்றியம் குமுளூர் ஊராட்சியில் உள்ள மேட்டு தச்சங்குறிச்சியில் கடந்த ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகம் செய்யாததை கண்டித்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருச்சி புள்ளம்பாடி சாலையில் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

லால்குடி அருகே குமுளூர் ஊராட்சியில் உள்ள மேட்டு தச்சங்குறிச்சியில் 250க்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக முறையாக குடிநீர் விநியோகம் வழங்காதால் அப்பகுதி மக்கள் இது குறித்து ஊராட்சி நிர்வாகம், ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகளிடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று காலை புள்ளம்பாடி திருச்சி சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடிநீர் வழங்கும் வரை போராட்டத்தை கைவிட போவதாக இல்லை என பொதுமக்கள் கூறி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் காணிக்கிளிய நல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் போச்சுவார்த்தை நடத்தினார். ஊராட்சி மன்ற தலைவர் குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து பொதுமக்கள் சா

Leave A Reply

Your email address will not be published.