மாற்றுத்திறனாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டம்….
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக பார்வையற்றோர் சங்கத்தின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக சுமார் 50-க்கும் அதிகமான (பார்வையற்ற) மாற்றுத்திறனாளிகள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
வருவாய் துறையின் மூலம் பார்வையற்றோருக்கு மாதம் தோறும் வழங்கும் 1000 ரூபாய் பணத்தை 5000 ரூபாய் உதவித்தொகையாக உயர்த்த வேண்டும். அரசு பேருந்துகளில் பார்வையற்றோர் பயணிக்கும் போது அவருடைய உடமைகளுக்கு டிக்கெட் வாங்க கூடாது.
திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் நீதிமன்றம் பேருந்து நிலையத்திலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பார்வையற்றோர் வந்து செல்ல ஏதுவாக அதனை மாற்ற வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.
அரை மணி நேரத்திற்கும் அதிகமாக மாவட்ட ஆட்சியர் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு.
