பேரறிஞர் அண்ணா நினைவு நாள் : அமைச்சர் அன்பில்மகேஸ் மாலை அணிவித்து மரியாதை

0 120
Stalin trichy visit

திருச்சி, பிப்.3  பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.கழக செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகளுடன் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள காமராஜர் சிலையில் இருந்து மௌன ஊர்வலமாக புறப்பட்டு சிந்தாமணி பகுதியில் அமைந்துள்ள அண்ணாசிலைக்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில் மாநகரக் கழகச் செயலாளர் மு.மதிவாணன் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே என் சேகரன், சபியுல்லா, மாநில அணி நிர்வாகி செந்தில் பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கழக முன்னோடிகள் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

 

 

Leave A Reply

Your email address will not be published.