சொத்து வரி உயர்வை குறைக்க வலியுறுத்தி நகராட்சி ஆணையரிடம் மனு
திருச்சி, பிப்.17 திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா திருமண மண்டப உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் தாலுகாவில் உள்ள திருமண மண்ட உரிமையாளர்கள் சொத்து வரி இருமடங்காக உயர்ந்துள்ளது. இதனை குறைக்க வலியுறுத்தி துறையூர் நகராட்சி ஆணையர் சுரேஷ்குமார் இடம் மனு அளித்தனர் இந்நிகழ்ச்சியில் பாக்கியலட்சுமி திருமண மண்டபம் உரிமையாளர் கிருஷ்ணமூர்த்தி, செயலாளர் பாலாஜி திருமண மண்டபம் உரிமையாளர் ரங்கராஜன், பொருளாளர் உரிமையாளர் பாஸ்கரன், எஸ்.கே திருமணமண்டபம் செல்வராஜ், சுபலட்சுமி திருமண உரிமையாளர், ஐ.டி.ஆர் திருமண மண்டபம் உரிமையாளர் தங்கராஜ், அழகு சரவணன் உள்பட 30-க்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்