மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம்

0 316
Stalin trichy visit

திருச்சி, பிப். 17 ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் வட்டார வளமையம் சார்பில் திருச்சி மாவட்ட்ம் துறையூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இம்முகாமினை முசிறி மாவட்ட கல்வி அலுவலர் பொறுப்பு அய்யாசாமி தலைமையேற்று தொடங்கி வைத்தார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மணிமேகலை முன்னிலை வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக வட்டார கல்வி அலுவலர் மார்ட்டின் மற்றும் நகர் மன்ற தலைவர், சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரகு ஆகியோர் கலந்து கொண்டனர்.
முகாமில் உடல் இயக்க குறைபாடு அறிவுசார் குறைபாடு பார்வை திறன், செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகளை சிறப்பு மருத்துவர்கள் குமார், அன்பழகன், சுந்தரவேலு, ஜெயந்தி ஆகியோர் கண்டறிந்து தேசிய அடையாள அட்டை (யூ டி ஐ டி) அட்டை ஆகியவற்றை வழங்கினார், முகாமில் 116 பேர் கலந்து கொண்டனர். அதில் உடலியல் குறைபாடு 36 நபர்கள் அறிவிசார் குறைபாடு நபர்கள் 35, செவித்திறன் குறைபாடு12 நபர்கள், மற்றும் பார்வை திறன் குறைபாடு உடையோர் 33 நபர்கள் பயனடைந்தனர், முகாமிற்கான சிறப்பு ஏற்பாடுகளை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன் செய்திருந்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வளமைய சிறப்பு பயிற்றுநர்கள் சோபியா, எஸ்தர், செந்தமிழ்செல்வி , நிரஞ்சனா ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர். முன்னதாக வட்டார வள மைய மேற்பார்வையாளர் புகழேந்தி வரவேற்புரையாற்றினார். நிறைவாக மருத்துவர் நடேசன் நித்யானந்தம் நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.