பெண்கள் – குழந்தைகள் பாதுகாப்புக்கு இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள்: மாநகர காவல் ஆணையர் ஆய்வு செய்தார்

0 164
Stalin trichy visit

திருச்சி, நவ.17  திருச்சி மாநகரில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் 7 இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்களை மாநகர காவல் ஆணையர் பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார்.

தமிழகத்தில் நகர்ப்புறங்களில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில், 312 கோடி செலவில் தொடங்கப்பட்ட 80 இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  நவ.11 இல்  சென்னையில் தலைமைச் செயலகத்தில் இருந்து புதிய இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் சிறப்பு கவனம் செலுத்தி, தாம்பரம், ஆவடி, சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், திருச்சி, திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய மாநகரங்களில் ரோந்து பணிக்காக இந்த புதிய வாகனங்கள் பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, திருச்சி மாநகரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, திருச்சி மாநகரத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 7 இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்களை மாநகர காவல் ஆணையரக வளாகத்தில், இன்று  காலை மாநகர காவல் ஆணையர் ந.காமினி. பார்வையிட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஓட்டுநர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்கள்.

திருச்சி மாநகர காவல் ஆணையர்  அறிவுரை வழங்கும்போது, இளஞ்சிவப்பு வாகன ஓட்டுநர்கள் மற்றும் பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் அைைனவரும், தங்கள் வீட்டு பெண்கள் மற்றும் குழந்தைகளின்மேல் காட்டும் அக்கறைப்போல அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகளை பாவித்து பாதுகாப்பு பணிபுரிய வேண்டும் என்றும், பணி நேரத்தில் உயர்ந்த ஒழுக்கத்துடனும், கண்ணியத்துடனும் நடந்து கொள்ள வேண்டுமென்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் கண்ணும் கருத்துமாக செயல்படவேண்டுமென்றும் என  அறிவுரைகள் வழங்கினார்கள்.

திருச்சி மாநகரில் உள்ள கண்டோன்மெண்ட், பொன்மலை, கேகேநகர், ஸ்ரீரங்கம், காந்திமார்க்கெட், தில்லைநகர் ஆகிய 6 காவல் சரகங்களில் தலா 1 வாகனமும், பஞ்சப்பூர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை கண்காணிக்க 1 வாகனம் என மொத்தம் 7 இடங்களில் இளஞ்சிவப்பு ரோந்து (PINK PATROL) வாகனங்கள் இயக்கப்பட்ட உள்ளதாக மாநகர காவல் ஆணையர் தெரிவித்தார்.

ஒவ்வொரு இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களிலும் இரண்டு பெண் சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தங்கள் சரகங்களில் ரோந்து பணிபுரிவார்கள்.

Leave A Reply

Your email address will not be published.