ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்ற இருவர் கைது

0 155
Stalin trichy visit

திருச்சி, நவ.18  திருவெறும்பூர் அருகே உள்ள மலைக்கோவில் பகுதியில் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பதாக திருவெறும்பூர் ஏ எஸ் பி அரவிந்த் பனாவாத் தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அந்த பகுதியில் அதிரடியாக கண்காணிப்பில் ஈடுபட்ட பொழுது திருவெறும்பூர் நொச்சி வயல் புதூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பரமேஸ்வரன் (39) அவரது தம்பி ராஜு(33) ஆகிய இரண்டு பேரையும் ஆன்லைன் லாட்டரி விற்ற பொழுது கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன் மற்றும் ரூ700 பணம் ஆகிவற்றை பறிமுதல்செய்து திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.