பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பிறந்தநாள் விழா
துறையூர் பேருந்து நிலையத்தில் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 85ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா
கொண்டாடப்பட்டது
திருச்சி மாவட்டம் துறையூர் அண்ணா பேருந்து நிலையம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நத்தம் வீரராகவன் தலைமையில் கொண்டாடப்பட்டது. வன்னியர் சங்க கொடி மற்றும் பாட்டாளி மக்கள் கட்சி கொடியை ஏற்றிவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பிறந்தநாளை பசுமைத்தாயக நாளாக கொண்டாடும் விதமாக துறையூரில் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது, இந்நிகழ்ச்சியில்
நகர செயலாளர் கோதண்டராமன் வரவேற்புரை ஆற்றினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் மெடிக்கல் குமார் மற்றும்
வன்னியர் சங்க மாவட்ட செயலாளர்
வி பி தங்கராஜ், வன்னியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் மதுபாலன் ,
மாவட்ட தொழில் சங்க தலைவர்
பாஸ்கரன் , உழவர் பேரியக்க மாநில தலைவர் சௌந்தராஜன், ஆகியோர் முன்னிலை வைத்தனர் ஒன்றிய செயலாளர்கள் கார்த்திக்,ரகு, தனபால், ஒன்றிய தலைவர் சந்திரசேகர் மற்றும் மாவட்ட வன்னியர் துணைத் தலைவர் ராஜா மாவட்டத் துணைச் செயலாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பொதுமக்களுக்கு மதிய உணவு வழங வழங்கப்பட்டது. ஒன்றிய தலைவர்
சதீஷ் கண்ணா நன்றி கூறினார் கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு மருத்துவர் ராமதாஸ் வாழ்க என்று கோஷங்களை முழங்கினர்