திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் காவலர் மன்றம் : மாவட்ட எஸ்.பி திறந்து வைத்தார்

0 174
Stalin trichy visit

திருச்சி, பிப். 26 திருச்சி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் போலீசருக்கான காவலர் மன்றத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு அரசு அரசாணை G.O.(MS) 351, dated : 10.07.2025 Home (Police-IX) Department, Secretariat, Chennai – ன் படி அனைத்து மாவட்ட ஆயுதப்படை வளாகத்திலும் காவலர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அவர்களது குழந்தைகள் பயன்பெறும் வகையில் காவலர் மன்றம் ஆரம்பிக்கப்பட அறிவுறுத்தியதன் பேரில் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஆயுதப்படை வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தை புதுப்பித்து, அதற்கு “காவலர் மன்றம்” என பெயரிட்டு, நேற்று (25.02.2026) மாலை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் திறந்து வைத்தார். 

மேற்படி மன்றத்தில் காவலர்களது குழந்தைகள் தங்களது ஒய்வு நேரத்தை பயனுள்ள விதமாக செலவிடும் வகையில் புத்தகங்கள், செஸ், கேரம்போர்டு மற்றும் வாலிபால், கைப்பந்து, கால்பந்து, கிரிக்கெட் போன்ற விளையாட்டு உபகரணங்களும்வைக்கப்பட்டுள்ளன. மேலும் மற்றும் 02- கணிணிகளும் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வில், திருச்சி மாவட்ட ஆயுதப்படை காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் செலவிடும்படி காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம்  அறிவுறுத்தினார். 

Leave A Reply

Your email address will not be published.