பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம்

0 304
Stalin trichy visit

திருச்சி, ஜன.9 தமிழர் திருநாள் பொங்கல் பண்டியை முன்னிட்டு  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கி தொடங்கி வைத்தார். .

திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தினை மாவட்ட ஆட்சியர், மேயர் தொடங்கி வைத்தனர்..

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தினைப் பொறுத்தவரை, நடைமுறையிலுள்ள 8,33,131 அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் 968 குடும்பங்கள் ஆக மொத்தம் 8,34,099 குடும்பங்களுக்கு 1291 நியாயவிலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் எவரேனும் ஒருவர் தாங்களது குடும்ப அட்டைக்கு வழங்கப்பட்ட டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதி நேரம் ஆகியவற்றினை பின்பற்றி பொங்கல் பரிசுத் தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.

அதன் அடிப்படையில் திருச்சி மாவட்டத்தில் 8.34 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகிக்கப்பட உள்ளது. அதன் தொடக்கமாக இன்று திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பெரிய மிளகு பாறை பகுதியில் உள்ள நியாய விலை கடையில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் ஆகியோர் பொதுமக்களுக்கு பச்சரிசி, சக்கரை, முழு கரும்பு, வேஷ்டி, சேலை உள்ளிட்ட பொங்கல் பரிசு தொகுப்பை இன்று வழங்கினர்.

இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அமித்குப்தா, திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அருள், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி இணைப்பதிவாளர், செயலாட்சியர் அரசு, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் வசந்தா, திருச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் செந்தில்குமார், பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர் மாரிச்சாமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சாந்தி,மண்டலத் தலைவர்கள், பகுதி செயலாளர் மோகன்தாஸ், மாமன்ற உறுப்பினர் புஸ்பராஜ் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Leave A Reply

Your email address will not be published.