அருள்மிகு பூத நாயகி அம்மன் கோவில் பொன்னூஞ்சல் விழா
திருச்சி, அக்.9 அருள்மிகு பூத நாயகி அம்மன் கோவில் பொன்னூஞ்சல் விழா மற்றும் பொங்கல் விழா விமர்சையாக நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருள்மிகு பூதநாயகி அம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 23ஆம் தேதி பூச்சொரிதல் விழாவுடன் கோலாகலமாக தொடங்கியது . அதனைத் தொடர்ந்து 15 நாள் திருவிழாவாக நடைபெற்று வருகின்றது.முதல் எட்டு நாட்கள் கொழுவிலும் , அடுத்த எட்டு நாட்கள் உற்சவர் அலங்கரிக்கப்பட்ட தேரில் திருவீதி உலாவும் நடைபெற்று வருகின்றன.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பொன்னூஞ்சல் விழா இன்று அதிகாலை நடைபெற்றது
அம்மன் திரு வீதி உலாவை தொடர்ந்து பெரிய பள்ளிவாசல் அருகில் அமைந்துள்ள பூதநாயகி அம்மன் திடலில் பொன்னூஞ்சல் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.
இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை ஊஞ்சலில் வைத்து,பாடல் பாடி பக்தி பரவசத்தில் தரிசனம் செய்தனர்.
அதைத் தொடர்ந்து இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பூதநாயகி அம்மன் கோவில் வளாகம் முன்பு பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் கிடா மற்றும் சேவல் வெட்டியும் வேண்டுதல்களை நிறைவேற்றப்பட்டது.