குணசீலம் பகுதியில் நாளை மின்விநியோகம் நிறுத்தம்
குணசீலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக 17 ஆம் தேதி மின் நிறுத்தம் அறிவிப்பு.
திருச்சி, ஆக.16 தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக முசிறி கோட்ட இயக்கலும் காத்தலும் செயற்பொறியாளர் ஆனந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது, குணசீலம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் ஏவூர், அய்யம்பாளையம் ஆமூர், குணசீலம், வாத்தலை, மாங்கரை பேட்டை ,நெய்வேலி, கொடுந்துறை, மணப்பாளையம், நாச்சம்பட்டி ,வீரமணி பட்டி ,தின்ன கோணம், சித்தாம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வரும் 17ஆம் தேதி காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அறிவித்துள்ளார்