திருச்சி புதிய மாவட்ட ஆட்சியராக பிரதிக் தயாள் பொறுப்பேற்பு

0 10
Stalin trichy visit

திருச்சி, ஜூன் 1 திருச்சி மாவட்ட ஆட்சியராக இருந்த வே. சரவணன் பணியிடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து புதிய ஆட்சியராக பிரதிக் தயாள் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
தில்லியை பூர்விகமாகக் கொண்ட அவர் பிஏ. எல்.எல்.பி. முடித்து விட்டு, கடந்த 2016 ஆம் ஆண்டு யுபிஎஸ்சி தேர்வெழுதி அகில இந்திய அளவில் 92 ஆவது இடம் பெற்றார். இதையடுத்து 2017 இல் இந்திய ஆட்சிப்பணிக்குத் தேர்வு செய்யப் பட்டார்.
இதற்குமுன்,திருநெல்வேலி மாவட் டத்தில், சேரன் மகாதேவியில் துணை ஆட்சியராகவும், உதவிக் கோட்ட நடுவராகவும் கடந்த அக்டோபர் 2019 முதல் ஜூன் 2021 வரை பணியாற்றினார். ஈரோடு மாவட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (ஊரக வளர்ச்சி – திட்ட அலுவலர்) ஆகவும் பணியாற்றினார்.
2021 முதல் தமிழக அரசின் நிதித் துறையில் துணை, இணைச் செய லராகப் பணியாற்றினார். 7 ஆவது மாநில நிதிக்குழுவின் உறுப்பினர் செயலராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தற்போது திருச்சி மாவட்டத்தின் 147 ஆவது ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியது:
வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை: ‘வரலாற்றுச் சிறப்புமிக்க திருச்சி மாவட்டத்தின் ஆட்சியராகப் பொறுப்பேற்றுள்ளேன். மாவட்டம் முழுவதும் கள ஆய்வு மேற்கொண்டு, மக்களின் தேவை களைப் பூர்த்தி செய்வது, தேவையான அடிப்படை வசதிகளை மேம் படுத்திக் கொடுப்பது, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு நேர்மையான, திறமையான நிர்வாகத்தைக் கொடுப்பது என்பவை எனது நோக்கங்க ளாகும். வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு முன்னுரிமை வழங்கி,திருச்சி மாவட்டத்தை அடுத்த கட்டத்துக்குத் கொண்டு செல் வேன் என்று கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.