திருச்சியில் பள்ளிகளை திறக்க முன்னேற்பாடுகள் தீவிரம்!

0 397
Stalin trichy visit

நாளை மறுநாள் 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் வகுப்பறைகளை சுத்தம் செய்வது – மாஸ்க் அணிய வேண்டும், கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய நோட்டிஸ்களை ஒட்டுவது, மாணவர்கள் சமூக இடைவேளையை பினற்றுவதற்கு ஏதுவாக இடைவேளை விட்டு வட்டம்மிடுவது போன்ற பணிகள் அரசு பள்ளிகளில் நடைபெற்று வருகிறது.

மேலும் நீண்ட நெடு நாட்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்க இருப்பதால் வகுப்பறைகளில் உள்ள ஒட்டடைகளை சுத்தம் செய்வதோடு,மருந்துகள் அடிப்பது போன்ற பணிகளும் நடைபெற்று வருகிறது.

பள்ளிகள் திறக்கப் பட்டாலும் பள்ளிக்கு வர விருப்பம் இல்லாத மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் வழியாக பாடங்களைக் கற்கலாம்,மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது ஒருவருக்கு ஒருவர் உறவுகளை பகிர்ந்து உண்ண கூடாது அதேபோல் குழுவாக இடங்களில் அமரக் கூடாது, பள்ளி வளாகங்களில் கைகளை கழுவுவதற்கு உரிய தண்ணீர் வசதி மற்றும் சோப்பு வைத்திருக்க வேண்டும் போன்ற பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.