கோவில் கும்பாபிஷேகத்தில் அர்ச்சகர் உயிரிழப்பு

0 301
Stalin trichy visit

திருச்சி, செப். 9  திருச்சி மாவட்டம் வையம்பட்டி தட்டாரப்பட்டியில் உள்ள கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்ற நிலையில் கும்பாபிஷேக விழாவிற்கு வந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த சிவராமன் மகன் கோவில் கும்பாபிஷேகத்தில் அர்ச்சகர் உயிரிழப்பு ராஜகோபால் (19)   என்பவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு உடனடியாக அவரை அருகில் இருந்தவர்கள் தனியார் வாகனத்தின் மூலம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் வரும் வழியில் உயிர் இழந்ததாக கூறினர் .
இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவரின் உடலைக் கைப்பற்றி மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் பற்றி
வையம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.