துறையூரில் திமுக ஆட்சிக்கால முறைகேடுகள் ஆய்வு: திமுக ஆட்சிக்கால முறைகேடுகள் ஆய்வு – அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்ததுணை சபாநாயகர் ரவிசங்கர்
திருச்சி, ஜூலை 16 துறையூரில் திமுக ஆட்சிக்கால முறைகேடுகள் ஆய்வு – அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த துணை சபாநாயகர் ரவிசங்கர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சிக்குட்பட்ட 20 மற்றும் 22-வது வார்டுகளில் திமுக ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தமிழக வெற்றிக்கழகத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
22-வது வார்டில் உள்ள நகராட்சி சிறுவர் பூங்காவில், நகராட்சியின் உரிய அனுமதியின்றி திமுக நிர்வாகி ஒருவர் கட்டிடம் கட்டியதாக வெளியான புகாரின் அடிப்படையில் அவர் ஆய்வு செய்தார். ஆய்வில், நகராட்சியின் அனுமதி பெறாமல் கட்டிடம் அமைக்கப்பட்டிருப்பது தெரியவந்ததாக கூறப்பட்ட நிலையில், சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க நகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, 20-வது வார்டு காமராஜர் நகர் பகுதியில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து திமுக நிர்வாகி வணிக வளாகம் கட்டியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாகவும் ஆய்வு மேற்கொண்டார். அந்த வணிக வளாகத்திற்கு வழங்கப்பட்டிருந்த மின் இணைப்பை உடனடியாக துண்டிக்பட்டது, மேலும் ஆக்கிரமிப்பை அகற்ற வருவாய்த் துறையினர் நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 20-வது வார்டில் கடந்த 60 ஆண்டுகளாக அரசு நத்தம் இடத்தில் பட்டா இல்லாமல் வசித்து வரும் குடியிருப்போருக்கு விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் துணை சபாநாயகர் ரவிசங்கர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உடனிருந்தனர். ரவிசங்கர் மேற்கொண்ட நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது குறிபிடதக்கது.