பள்ளி மாணவியை தாக்கிய ஆசிரியை மீது நடவடிக்கை கோரி போராட்டம்

0 403
CM

திருச்சி வரகனேரி அந்தோணியார் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெர்மன் மேரி (30) அளித்துள்ள மனுவில்

எனக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளார்கள். நான் வீட்டு வேலை செய்து வருகிறேன். எனது இரண்டாவது மகள் பிலோசியா மேரி தெப்பக்குளம் அருகில் ஹோலி கிராஸ் பெண்கள் ஹையர் செகண்டரி ஸ்கூல் (holly cross higher secondary school) ஏழாம் வகுப்பு “A” பிரிவில் படித்து வருகிறாள். கண்ணில் மெட்ராஸ் ஐ கடந்த 17 மற்றும் 18 ஆகிய இரண்டு நாட்கள் என் மகள் பள்ளி செல்லவில்லை எனவே அறிவியல் ஆசிரியர் கேத்தலின் அவர்கள் ஏன் வீட்டுப்பாடம் செய்யவில்லை என்று என் மகளை உன்னை பார்க்கவே அருவருப்பாக உள்ளது என்று சொல்லி கெட்ட வார்த்தையால் திட்டி கையால் ஓங்கி இடது கன்னத்திலும் காதலும் அறைந்தார் மிஸ் அடிக்காதீங்க வலிக்குது என்று என் மகள் சொல்லவும் ஏண்டி உனக்கு இவ்ளோ திமிரா என்று சொல்லி முடியை பிடித்து சுற்றி தள்ளிவிட்டார். இதனால் என் மகள் சுவற்றில் இடித்து கீழே விழுந்ததால் இதனால் தலையிலும் காதிலும் வீக்கம் ஏற்பட்டது. மேலும் உங்க அம்மா குப்பைக்காரி தானே என்றும் பரட்சி என்றும் என் மகளை திட்டியுள்ளார் இதனை வேலை முடித்து விட்டு வந்த என்னிடம் என் மகள் அழுது கொண்டே செல்லும்போது மயங்கி கீழே விழுந்துவிட்டால் எனவே கடந்த 22-11-2022 நாளன்று இரவு சுமார் 6.30 மணி முதல் 7 மணி அளவில் திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக என் மகளை சேர்த்தேன்.

அப்பொழுது கோட்டை காவல் நிலையத்தில் இருந்து என் மகளை விசாரிக்க வந்த காவலர்கள் சீருடை இருந்தார்கள் அதில் அடையாளம் தெரிந்த ஆண் காவலர் ஒருவரும் பிரியதர்ஷினி என்ற பெண் காவலரும் என் மகளை நடந்ததை சொல்ல சொல்லி அதனை வீடியோவாக பதிவு செய்து கொண்டார்கள், மேலும் குழந்தையான என் மகளிடம் மட்டும் அவர்களே எழுதிய புகார் மனுவில் முழுமையாக வாசித்துக் காட்டாமல் என் மகளிடம் மட்டும் கையப்பம் வாங்கிக் கொண்டார்கள். 23-11-2022 நாளன்று மாலை காவல் நிலையம் சென்றபோது SI சட்டநாதன் அவர்கள் என்னை விசாரணை செய்தார். அப்போது தான் என் மகளிடம் வாங்கிய புகார் மனுவை மீண்டும் காவலரே எழுதி என்னை கையெழுத்து போட சொல்லி கட்டாயப்படுத்தினார்கள். அப்பொழுதுதான் எனக்கு தெரிந்தது 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் என் மகள் பள்ளிக்கு செல்லவில்லை ஆனால் முறையாக புகார் மனுவை பெறாமல் அலட்சியமாகவும் அசாதாரணமாகவும் புகார் மனு பெற்றது தெரியவந்தது. அதில் 20 மற்றும் 21 தேதிகளில் பள்ளிக்கு வரவில்லை என்று என் மகளை அடித்தது சம்பந்தமாக நான் பள்ளிக்குச் சென்று விசாரித்தேன் என்று தவறாக குறிப்பிட்டிருந்தது எனவே அவச எண் 100-ல் தொடர்பு கொண்டு இந்த தகவலை சொல்லிவிட்டு மாலை காவல் ஆணையர் அலுவலகம் வந்து புகார் மனு தவறாக உள்ளது என்று கூறினேன். ஆனால் அவர்கள் மைக் 23 AC L&O DC யை போய் பார்க்க சொன்னார்கள்.

click the image to chat on whatsapp

click the image to chat on whatsapp

Psr Trust

எனக்கு எங்கு போவது என்று தெரியாமல் மீண்டும் மறுநாள் (24-11-2022) மலை கோட்டை காவல் நிலையம் சென்றேன். அப்பொழுது எதிர் தரப்பை காவல் நிலையம் வரச் சொல்லி தயாளன் ஆய்வாளர் அவர்கள் என்னையும் எதிர்த்தரப்பையும் செட்டில்மெண்ட் பேசிட்டு வாங்க பாவம் அவங்க அரசு ஊழியர் என்றும் அப்புறம் FIR ஆர் போட்டு தாரேன் என்று சொன்னார். வெளியில் வந்து என்னிடம் கேத்தலின் அவர்கள் பேசினார் என் பிள்ளையை கண்டிப்பதற்கு தான் அடித்தேன் என்று சொன்னார். நான் ஆய்வாளரிடம் சென்று FIR ஆர் போட்டு தாங்க என்று சொல்லியும் CSR மட்டும் தந்துவிட்டு மீண்டும் கேத்தலின் மற்றும் எண்ணெயை அழைத்து பேசினார் அப்பொழுது கேத்தலின் என் குழந்தையை அடித்து ஒத்துகொண்டார் எனவே ஆய்வாளர் தயாளன் அவர்கள் கேத்தலின் அவர்களிடம் அம்மா ஒழுங்கா பேசி முடிங்க இல்லேன்னா ஜெயிலுக்கு போயிடுவீங்க என்று சொல்லியதோடு மீண்டும் நாளை வாங்க பேசிவிட்டு என்று அனுப்பி விட்டார்.

HAPPY BIRTHDAY

மீண்டும் மறுநாள் 25-11-2022 நேற்று காலை இலிருந்து காவல் நிலையத்தில் நான் இருந்தேன் மேலும் ஆய்வாளர் அவர்களுக்கும் பலமுறை போன் செய்து FIR தாங்க என்று கூறினேன். முதலில் 12 மணி வாங்க அப்புறம் 3 மணி வாங்க

அப்புறம் 5 மணிக்கு வாங்க என்று என்னை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகினார். அதன் பின்னர் இரவு 7 மணி அளவில் என்னை மட்டும் அழைத்து FIR போட்டு தாரேன் வாங்கிட்டு போ என்றார் சார் ஏன் எதிர்த்தரப்பினை அழைக்கல அவங்கள கைது செய்யல என்று கேட்டேன் அதெல்லாம் எங்களுக்கு தெரியும் உன் வேலையை பாருமா என்று சொன்னார்.

சிறிது நேரத்தில் FIR கொடுத்தார் அதில் என் மகளுக்கு நடந்த கொடுமையை நான் புகாரை மாற்றிக் கொடுத்ததும் சாதாரண சட்டப்பிரிவை பதிவு செய்தது தோடு மட்டுமல்லாமல் பெயருக்கென ஒரு FIR ஐ தந்தார். அதனை பார்த்தவுடன் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது எனவே என்ன சார் இப்படி சட்டப்பிரிவு போட்டு இருக்கீங்க என்று கேட்டதற்கு J.M-1 ஜட்ஜ் அம்மா தான் இப்படி FIR போட சொன்னாங்க என்று கூறினார். சார் என் பொண்ணுக்கு ஏதாவது ஆய் இருந்தா என்ன செய்யறது என்று கேட்டதற்கு உன் பொண்ணு செத்தா கொலை வழக்கு போட்டு தாரேன் என்று திமிராகவும் அடாவடித்தனமாக பதில் சொன்னார். எனவே உடனடியாக ஆய்வாளர் இதுபோன்று பேசுகிறார் என்று அவசர என் 100 தொடர்பு கொண்டு கூறினேன்.

எனது மகளுக்கு நடந்த கொடுமையை பார்த்து முதல் நாளில் செட்டில்மெண்ட் பேசுங்க காரணம் அவங்க அரசு ஊழியர் இல்லனா ஜெயிலுக்கு போயிடுவீங்க என்று சங்கதியை சொன்ன ஆய்வாளர் மறுநாள் எதிரி அழைத்து கைது செய்யாமல் பேசாமலே பெயருக்கென ஒரு FIR தந்த செயலானது ஆய்வாளர் மீது சந்தேகமும் அதிருப்தியும் ஏற்ப்பட்டுள்ளது மேலும் மேற்கண்ட ஆய்வாளர் தயாளன் அவர்கள் விசாரித்தால் உண்மையான விசாரணையும் செய்ய மாட்டார்.

மேலும் எதிரிக்கு சாதகமாகவும் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு பாதகமாகவும் இருந்து வந்தது தெளிவாகத் தெரிகிறது. எனவே அய்யா அவர்கள் உயர் அதிகாரி விசாரணை செய்ய வேண்டும் என்றும் அதன் மூலம் சரியான சட்டப்பிரிவுகளை மாற்றம் செய்து குழந்தையிடம் கண்மூடித்தனமாகவும் அடாவடித்தனமாகவும் நடந்து கொண்ட ஆசிரியை கேத்தலின் அவர்களை கைது செய்ய வேண்டும் கோரி போராட்டத்தில் ஈடுபட்டார்.

National
Leave A Reply

Your email address will not be published.

எங்களது புதிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துக் கொள்ளவேண்டுமா ? இல்லை ஆம்
error: Content is protected !!