தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

0 198
Stalin trichy visit

ரவுண்டானாவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

திருச்சி மாவட்டம் லால்குடி ஒன்றியத்திற்க்கு உட்பட்ட ரவுண்டானா,சிவன்கோயில்,மணக்கால் அகலங்கதல்லூர்,தாரானூர்,பெருவளநல்லூர்,காட்டூர்,செம்பரை உள்ளிட்ட பகுதிகளில் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் 71வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நிர்வாகிகள் கழக கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாடினர்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேமுதிக தலைவரின் 71 வது பிறந்தநாள் விழா திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் கே. எஸ்.குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் லால்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ரவுண்டானா சிவன்கோயில்,மணக்கால்,அகலங்கதல்லூர்,தாரானூர்,பெருவளநல்லூர்,காட்டூர்,செம்பரை உள்ளிட்ட பகுதிகளில் கழக கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இதனை தொடர்ந்து சந்தப்பேட்டையில் உள்ள ஆதி திராவிடர் விடுதியில் தங்கியுள்ள மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கினார்.
மேலும் பல்வேறு பகுதிகளில் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் லால்குடி வடக்கு ஒன்றிய செயலாளர் கார்த்திக், தெற்கு ஒன்றிய செயலாளர் தேவா, மாவட்ட அவைத் தலைவர் லானா முருகேசன், நகர செயலாளர் பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமார் ஒன்றிய நிர்வாகிகள் கருப்பையா, முருகானந்தம், அம்பேத், பேபி மற்றும் தேமுதிக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.