தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்ட போட்டி…

0 306
Stalin trichy visit

தேசிய விளையாட்டு தினத்தை முன்னிட்டு இன்று ஆகஸ்ட் 27  மாரத்தான் ஓட்டப்போட்டி அரசு தலைமை மருத்துவமனை அருகில் இருந்து துவங்கியது. திருச்சி காவல்துறை கூடுதல் ஆணையர்  அன்பு கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இறுதியில் பள்ளி வளாகத்துக்குள் நுழைந்த( நான்கு கிலோமீட்டர் ) முதல் 15 மாணவர்களுக்கும், முதல் 15 மாணவிகளுக்கும் சான்றிதழ் மற்றும் கேடயங்களை பள்ளி முதல்வர்  வழங்கினார். ஓடிய அனைத்து குழந்தைகளுக்கும் காலை உணவு கொடுக்கப்பட்டு நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதத்துடன் நிறைவு பெற்றது.. இப்போட்டி அமிர்த வித்யாலயம் உடற்கல்வித்துறையின் சார்பாக இரண்டாம் ஆண்டாக கொண்டாடப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.