பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கல்

0 228
Stalin trichy visit

 

திருச்சி, டிச. 9  முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

விழாவிற்கு முசிறி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன் தலைமை வகித்து 1,016 மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் விலை இல்லா மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்தி பேசினார்.அப்போது
திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், பெரியசாமி,
நகர செயலாளர் சிவக்குமார்,தலைமை செயற்குழு உறுப்பினர் ஆப்பிள் கணேசன்,
நிர்வாகி பிரபு,
ஒன்றிய குழு தலைவர் மாலா, முசிறி நகர மன்ற தலைவர் கலைச்செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமையாசிரியர் பல்தாசர் அனைவரையும் வரவேற்றார். முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 209, முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 244, முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி 376, தண்டலை புத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 187 உட்பட 1,016 மணவ, மனைவிகள் அரசின் விலையில்லா சைக்கிள்களை பெற்றுக் கொண்டனர்.
பள்ளி தலைமை ஆசிரியர்கள் நவஜோதி புகழேந்தி மற்றும் முசிறி நகர்மன்ற உறுப்பினர்கள்,
திமுக கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியில் தலைமை ஆசிரியை தீபா நன்றி கூறினார்.

Leave A Reply

Your email address will not be published.