காவல்துறை சார்பில் மக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

0 368
Stalin trichy visit

உத்தமர்சீலியில் காவல்துறை சார்பில் மக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் திருவாணைக்காவல் அருகே கல்லணை சாலையில் உள்ள உத்தமர்சீலியில் காவல் துறையில் சார்பில் மக்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.

லால்குடி உட்கோட்ட காவல் துறை சரக பகுதியான உத்தமர்சீலி பகுதியில் வசிக்கும் பொதுமக்களுடன் காவலர்கள் நல்லறவு பேணவும்,பொதுமக்கள் அச்சமின்றி பாதுகாப்புடன் வாழ்ந்திட காவல்துறை என்றும் துணை நிற்கும் என வலியுறுத்தி லால்குடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்த விழிப்முணர்வு பேரணியில் சமயபுரம் காவல் ஆய்வாளர் கருணாகரன், லால்குடி காவல் ஆய்வாளர் பிரபு, சிறுகனூர் காவல் ஆய்வாளர் சுமதி போக்குவரத்து காவல் ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் என 80 க்கும் மேற்பட்டோர் பேரணியில் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.