திருவெறும்பூரில் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் : அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சு
திருச்சி,டிச.8 திருவெறும்பூர் டிச.8 திருவெறும்பூரில் ரூ.31.25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சித் திட்டப்பணிகள் அமைச்சர் அன்பில் மகேஸ் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார்.
திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்ன சூரியூரில் தமிழக துணை முதல்வரின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் கங்காதரன் தலைமை வைத்தார். தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமை கழக பேச்சாளர் நெல்லிக்குப்பம் புகழேந்தி ரம்யா பேகம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்
தமிழக பள்ளிகல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது
இந்த பிறந்தநாள் என்பது ஒரு தனி மனிதரை பாராட்டி புகழ்வதற்காக மட்டுமல்லஅவரது உழைப்பை மெச்சும் விதமாக ஒரு மனிதனை நாம் பாராட்டுகிறோம் என்றால் தனிப்பட்ட மனிதனுக்காக அல்ல அந்த மனிதர் தான் வாழும் பொழுதெல்லாம் ஏழை எளிய மக்கள் மற்றும் இளைய சமுதாயம் நன்றாக வர வேண்டும் என்பதற்காக செயல்படுவதற்காக தான் இந்த பிறந்தநாள் விழாவை கொண்டாடி வருகிறோம்.
2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து மகளிர் உரிமை தொகை தமிழகம் முழுவதும் ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு வழங்கப்படுகிறது. இங்கு அந்த உதவி தொகையை பெறுபவர்களும் இருப்பீர்கள் கிடைக்காதவர்களும் இருப்பீர்கள் நேற்று தமிழக முதல்வர் பேசும் போது கூறியுள்ளார் டிசம்பர் 15ஆம் தேதி முதல் கிடைக்கப்பெறாத தகுதி உள்ள அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறியுள்ளார் 27 மாதங்கள் இந்த மகளிர் உரிமை தொகையை பெரும் தாய்மார்கள் உள்ளீர்கள்
இது அவர்களுக்கு மட்டுமல்ல அவர்கள் குடும்பத்தை சேர்ந்த பெண் பிள்ளைகள் படிக்கிறார்கள் என்றால் புதுமைப்பெண் திட்டம் ஆயிரம் ஆண் பிள்ளைக்கு தமிழ் புதல்வன்திட்டத்தின் மூலம் மாதம் ஆயிரம் வழங்கப்படுகிறது.
தயவுசெய்து யாரும் பிள்ளைகளை பள்ளி படிப்போடு நிறுத்தி விடாதீர்கள் கல்லூரிக்கு அனுப்பி வையுங்கள் உங்கள் பிள்ளைகளை படிப்பதற்கு நாங்கள் மாதம் ஆயிரம் ரூபாய் தருகிறோம் எனதமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறி இதுபோன்ற திட்டங்களை கொண்டுவந்துள்ளார்.
இப்படி திட்டங்களை பார்த்து பார்த்து நாம் செய்து வருகிறோம். ஒன்றியத்தில் இருக்கும் பாசிச பாஜக அரசு என்ன செய்கிறது 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழகத்திற்கு வழங்க வேண்டியரூ1290 கோடி ரூபாய் வழங்க மால் இழுத்தடித்து வருகிறது
இந்தத் திட்டத்தை காங்கிரஸ் கட்சியும் நமது தலைவர் கலைஞரும் சேர்ந்துதான் கொண்டு வந்தனர். இப்படி நமக்கு வரவேண்டிய அதை நிறுத்தும் பாஜகவிற்கு அதிமுக துணை போகிறது தமிழக முதல்வர் ஒன்றிய அரசிடம் ஏழை மக்களுக்கு உரிய அந்த பணத்தை உடனடியாக வழங்குங்கள் என கூறுகிறார்.இது மட்டும் இல்லை கல்விக்கான நிதி கடந்த இரண்டு ஆண்டுகளாக சுமார் ரூ3548 கோடி வழங்க வேண்டியதை நிறுத்தி வைத்துள்ளனர். ஒன்றிய அரசு உங்கள் குழந்தைகள் படித்தால் என்ன படிக்கவில்லை என்றால் என்ன எங்களுக்கு நீங்கள் ஓட்டு போடவில்லை என ஒன்றிய அரசு செயல்படுகிறது அதற்கு தமிழக முதல்வர் பிரதமர் மோடிக்கு எங்களது மாநிலத்தில் 40 லட்சம் குழந்தைகள் கல்வி பயின்று வருகிறகள் நீங்கள் வழங்க வேண்டிய ரூ3548 கோடி ரூபாயை நிறுத்தினால் அந்த குழந்தைகளின் கல்வி பாதிக்கும். மேலும் 32,000 மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாமல் போய்விடும் என எழுதியுள்ளார்.
உங்களுக்கு நிதி தர வேண்டும் என்றால் நாங்கள் சொல்வதை நீங்கள் கேட்டு கையெழுத்து போடுங்கள் மும்மொழி கொள்கையை ஒத்து கொண்டு கையெழுத்து போடுங்கள் என பிளாக் மெயில் செய்கின்றனர். அதற்கு தமிழக முதல்வர் நீங்கள் செய்யும் இந்த பிளாக் மயிலுக்கெல்லாம் பயப்பட மாட்டோம் நீங்கள் 3500 கோடி அல்ல 10,000 கோடி தருவதாக இருந்தாலும் அது எங்களுக்கு தேவையில்லை எங்களது குழந்தைகளை நாங்கள் படிக்க வைத்துக் கொள்கிறோம் என்று சொல்லும் தமிழக முதல்வரை நாம் பெற்றுள்ளோம்.
இப்படி பல்வேறு நிதி நெருக்கடியிலும் திருவெறும்பூர் தொகுதிக்கு 56 கோடி மதிப்பீடு பள்ளிக்கூடம் கட்டிக் கொடுத்துள்ளார். ஒலிம்பிக் அகாடமிரூ.150 கோடி மதிப்பீட்டில் இந்த பகுதியில் பணி நடைபெற்று வருகிறது
சூரியூரில் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டப்பட்டு வருகிறது. அதன் பணி மிக விரைவில் முடிந்து ஜனவரி மாதம் அதில் ஜல்லிக்கட்டு நடத்த இருக்கிறோம்
முத்தமிழறிஞர் கலைஞரின் பெயரை பஞ்சபூரில் 450 கோடி மதிப்பீட்டில் ஒரு பேருந்து நிலையம் கட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
மணப்பாறையில் 1100 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் பூங்கா அமைக்கப்பட்டு பல நிறுவனங்களை அங்கு தொழில் தொடங்க கொண்டு வந்துள்ளோம் காமராஜர் பெயரில் ரூ290 மதிப்பீட்டில் நூலகம் கட்டப்பட்டு வருகிறது.
தமிழகத்திற்கு பல்வேறு நிதி நெருக்கடி வரும் நிலையில் தமிழக முதல்வர் நமது மக்களுக்கு தேவையானபல்வேறு திட்டங்களை கொண்டு வந்து உள்ளார் நான் தற்பொழுது உங்களிடம் கூறியது சில உதாரணம் தான் தமிழ்நாடு அளவில் இதுபோன்று என்னென்ன திட்டங்களை செயல்படுத்துகிறார். என்பதை நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம்.
தமிழக துணை முதல்வர் நாம் உழைத்து ஒன்றிய அரசுக்கு வரியாக கொடுக்கக்கூடிய ஒரு ரூபாய்க்கு அவர்கள் நமக்கு திரும்ப கொடுப்பது 29 காசு தான் இதை வைத்து தான் தமிழக முதல்வர் நமக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்
நாம் செலுத்தும் வரி பணத்தை ராஜஸ்தான் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களுக்கு வாரி வழங்குகிறார்கள் அதனால்தான் தமிழக முதல்வர் எங்களது வரிப்பணத்தை எங்களுக்கு வழங்குங்கள் என கேட்கிறார் எங்கள் மக்களுக்கு இன்னும் நிறைய செய்வதற்கு காத்துக் கொண்டிருக்கிறோம் என கூறுகிறார் ஆனால் ஒன்றிய அரசு நம்மை திரும்பி கூட பார்க்க மறுக்கிறது
அந்த ஒன்றிய அரசனுடன் அதிமுக கட்சியின் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டணி வைத்துக்கொண்டு அந்த நிதியை தற்பொழுது தர வேண்டாம் அடுத்த வருடம் பார்த்துக் கொள்ளலாம் தேர்தல் முடியட்டும் எனக் கூறுகிறார் எப்படி நம்மை வஞ்சிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு ஆகும்
திருவெறும்பூர் தெற்கு ஒன்றியத்திற்கு சாலை பயணிக்கு ரூ18.51கோடி ரூபாய் மழை நீர் வடிகால் மற்றும் சாக்கடை பணி 3.89 கோடி குடிநீர் வசதி 2.56கோடி உரக்கிடங்கு அமைத்தல் குளம் தூர்வாருதல் உயர் மின் கோபுரம் அமைத்தல் அங்கன்வாடி மையம் கட்டுதல் மற்றும் சீரமைத்தல் பாலம் கட்டுதல் நெற்களம் பயணியர் நிழற்குடை நியாய விலை கடை சீரணி அரங்கம் நூலகம்சீரமைத்தல் பள்ளிகளுக்கு மிதிவண்டி நிறுத்தும் இடம் கட்டுதல் சமையல் கூடம் சீரமைத்தல் ஸ்மார்ட் கிளாஸ் அமைத்தல் உட்பட பல்வேறு திட்டங்கள் என தெற்கு ஒன்றியத்திற்கு மட்டும் ரூ 31.25 கோடி மதிப்பீட்டில் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது
தற்பொழுது செய்துள்ளது போதுமா என்றால் பத்தாது இன்னும் தேவையானது நாம் தொடர்ந்து செய்வோம் இது திருச்சி மாவட்டத்திற்கு அல்ல நமது மூன்று தொகுதிக்கு மட்டுமே
இந்த திட்டங்கள் வருவதற்கு காரணம் தமிழக முதல்வர் அதனை நமக்கு கேட்டு பெற்று தருபவர் தமிழக துணை முதல்வருக்கு தான் இந்த பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தை நடத்தி வருகிறோம் நமக்கான திட்டங்களை உரிமையுடன் பேசி நமக்கு பெற்று தருகிறார் உதயநிதி ஸ்டாலின் இந்த கூட்டத்திற்கு வந்திருக்கும் தாய்மார்கள் எல்லாம் தமிழக முதல்வர் கொண்டு வரும் திட்டத்திற்கு ஆதரவு கொடுத்து அவரது கரத்தை வலுப்படுத்தும் விதமாக 2026 ஆம் ஆண்டு உழைப்பது நாமாக இருந்தாலும் உதித்தது உதய சூரியனாக இருந்தது என்ற விதத்தில் தொடர்ந்து உங்களது ஆதரவை நீங்கள் வழங்க வேண்டும் என்றார்.
இக்கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் முக்கண் செங்குட்டுவன் நவல்பட்டு சண்முகம் கயல்விழி ஜெகதீசன் மாவட்டத் துணை அமைப்பாளர் நெசவாளர் அணி ரெங்கசாமி