மணப்பாறையில் சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்
திருச்சி, மார்ச் 18 மேற்காசியாவில் நடைபெறும் போரின் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன்காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மணப்பாறையில் சிலிண்டரை வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த மக்கள். முன்பதிவு கூட செய்ய முடியாத நிலை இருப்பதாக மக்கள் வேதனை. வழக்கமாக வீட்டிற்கான எரிவாயு சிலிண்டர் வாங்க செல்போனில் இருந்து முன்பதிவு செய்து விட்டால் எரிவாயு சிலிண்டர் எளிமையாக வீடு வந்து சேரும். ஆனால் சமீபத்திய நாட்களில் நிலவி வரும் கடும் தட்டுப்பாட்டல் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.
திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சிலிண்டர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றால் அந்த அழைப்பு பல நேரங்களில் கனெக்ட் ஆவதில்லை ஒருசில நேரங்களில் சுவிட்ச் ஆப் என்றும் தொடர்பு எல்லைக்கு வெளியில் உள்ளதாகவும் தகவல் வரும்.
இதனால் எரிவாயு சிலிண்டர் பெறமுடியாத மக்கள் இன்று எரிவாயு முகவர் அலுவலகத்திற்கு வந்து எரிவாயு சிலிண்டரை பெற்றுக் கொண்டு சென்றனர். இருப்பினும் சுமார் 10 நாட்களுக்கு முன்பு வரை பதிவு செய்வதற்களுக்கு மட்டுமே சிலிண்டர் வழங்கப்படுவதாக மக்கள் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி நேரில் சென்று தான் சிலிண்டரை வாங்கிக் கொள்ள வேண்டும் என்று கூறுவதால் மக்கள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் கால்கடுக்க காத்திருந்து வாங்கிச் செல்லும் நிலையும் இருந்தது. சிலிண்டர் தட்டுப்பாட்டால் மக்கள் வேதனை அடைந்துள்ளனர்.