புள்ளம்பாடி ரயில்வே கேட் பராமரிப்பு பணி : போக்குவரத்துக்கு தடை
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே புள்ளம்பாடி திருமழாபாடி சாலையில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மற்றும் நாளை மூடப்படுகிறது. போக்குவரத்துக்கு தடை. வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தல்.
புள்ளம்பாடி திருமழாபாடி சாலையில் ரயில்வே கேட் உள்ளது. இந்த சாலை வழியாக திருமானூர் திருமழாபாடி, அரியலூர், விரகாலூர்,ஆலம்பாக்கம் ,தஞ்சாவூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு தினமும் நூற்றுக்கு மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் புள்ளம்பாடி திருமழாபாடி சாலையில் உள்ள ரயில்வே கேட் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மற்றும் நாளை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மூடப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் திருச்சி லால்குடி வழியாக திருமானூர் திருமழாபாடி தஞ்சாவூர் அரியலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் வடுகர் பேட்டை கோலண்டாக்குறிச்சி வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.