பூவாளூரில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாம்

0 192
Stalin trichy visit

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே பூவாளூரில் உள்ள முதல்நிலை பேரூராட்சி வளாகத்தில் டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்களை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைப்பெற்றது. எம் எல் ஏ சௌந்தரபாண்டியன் தொடங்கி வைத்தார்.

டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்களை கட்டுப்படுத்த சிறப்பு பரிசோதனை முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில்லால்குடி அருகே பூவாளூர் முதல்நிலை பேரூராட்சி வளாகத்தில் தமிழக அரசின் உத்தரவின்படி டெங்கு, சிக்கன்குனியா போன்ற காய்ச்சல்களை கண்டறிவதற்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இந்த சிறப்பு மருத்துவ முகாமை லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் துவக்கிவைத்தார்.
இதில் சுற்று வட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டனர்.

இது நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் மற்றும் கவுன்சிலர்கள், மருத்துவர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.