ராகுல்காந்தி கைது: திருச்சியில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

0 196
Stalin trichy visit

திருச்சி,ஜூலை 22  ராகுல் காந்தி கைதுக்கு திருச்சி நீதிமன்றம் வாயிலில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

​டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை காவல்துறையைக் கொண்டு தாக்கி கைது செய்த மத்திய அரசைக் கண்டித்து, திருச்சி நீதிமன்றம் வாயிலில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

​​காங்கிரஸ் மாநிலப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் எம். சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் சிந்தாமணி செந்தில்நாதன் முன்னிலை வகித்தார். டெல்லியில் ஜனநாயக முறைக்கு எதிராக ராகுல் காந்தி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும், அவரைக் கைது செய்ததற்கும் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
​​இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான வழக்கறிஞர்களும், காங்கிரஸ் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகளும் திரளாகக் கலந்து கொண்டனர்.

Leave A Reply

Your email address will not be published.